தனிபடை போலீசாரின் பொறிவலையில் சிக்கிய டுபாகூர் போலீஸ்..! - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 September 2022

தனிபடை போலீசாரின் பொறிவலையில் சிக்கிய டுபாகூர் போலீஸ்..!

வண்டலுார் - மீஞ்சூர் 400 அடி பைபாஸ் சாலையில் மாலை இருட்டில் போலீஸ் போல் நடித்து இளஞ்ஜோடிகளிடம் நகை பறித்த பிரபல கொள்ளையன் சிவராமன் கைது..!


T16 நசரத்பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த 16.09.2022 ம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் 400 அடி பைபாஸ் சாலை சர்வீஸ் ரோட்டில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளஞ்ஜோடியிடம் பல்சர் இருசக்கர வாகனத்தில் போலீஸ் என கூறி வந்த ஒரு நபர் ரோட்டில் தனியாக காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை சிசிடிவி மூலம் காவல் ஆய்வாளர் கண்காணித்து வந்துள்ளார் 


அதனால் விசாரணை செய்ய வேண்டியுள்ளது எனக்கூறி, காரில் இருந்த ஆண் பெண் இருவரிடமும் இருந்த செல்போன் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை மிரட்டி பறித்து சென்றார், இது சம்பந்தமாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் T16 நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


மறு நாள் அதே போன்று இரண்டு சக்கர வாகனத்தில் பேசிக்கொண்டிருந்த இளஞ்ஜோடியிடம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட 400 அடி ரோடு பைபாஸ் சாலையில் இரவு 08.00 மணியளவில் 6 சவரன் நகையை போலீஸ் எனக்கூறி பறித்துச் சென்றுவிட்டார். 


இது சம்பந்தமாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் 17.09.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேற்படி கொள்ளையனை பிடிக்க சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம், அவர்கள் உத்தரவின் பேரில், பூவிருந்தவல்லி காவல் உதவி ஆணையாளர் முத்துவேல் பாண்டி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 


தனிப்படை போலீசார் தீவிர புலன்விசாரணை செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில்  மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் போலீஸ் எனக் கூறி இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் என்பது தெரிய வந்தது. 


கொள்ளையன் தொடர்ந்து இதேபோன்று கொள்ளையடிப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அந்நபரை பிடிக்க திட்டமிட்டனர். தனிப்படையில் உள்ள காவலர்கள் இளம்ஜோடி போல் 400 அடி பைபாஸ் சர்வீஸ் சாலையில் 3 இடங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் 18.09.2022 மற்றும் 19.09.2022  நாட்களில்  காத்து இருந்தனர். 


இந்நிலையில் 19.09.2022-ம் தேதி 400 அடி ரோடு பைபாஸ் சாலையில் வெள்ளவேடு டோல்கேட் அருகில் காரில் அமர்ந்திருந்த காவலர்களிடம் இரவு 08.00 மணிக்கு வந்த கொள்ளையன் சிவராமன் வழக்கம்போல் ஆண் போலீசாரிடம் காவல் ஆய்வாளர் கூப்பிடுகிறார் 


என்னுடன் வா எனக்கூற, அந்த போலீசார் காரிலிருந்து இறங்கி சிவராமனை பிடிக்க முயலும்போது சிவராமன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி போலீசாரை தட்டிவிட்டு தன்னுடைய பல்சர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார். 


ஏற்கெனவே 400 அடி சாலையில் இருபுறங்களிலும் சாதாரண உடையில் காத்திருந்த தனிப்படை போலீசார் பூந்தமல்லி பைபாஸ்சாலையில்  சிவராமனை விரட்டிச்சென்று 200 அடி ரோட்டில் உள்ள மதுரவாயல் டோல்கேட்டில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர், 


விசாரணையில் சிவராமன் மீது  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். தாம்பரம் காவல் ஆணையரகத்தில்  45 கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுபோன்று மேலும் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்ட இந்த நபர் மீது  யாரும் புகார் தெரிவிக்க முன்வரவில்லை என விசாரணையில் தெரிய வருகிறது. 


கைது செய்யப்பட்ட சிவராமனிமிருநது  பல்சர் இருசக்கர வாகனம், 10 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டு விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது, சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் தொடர்கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபரை  பொறிவைத்து பிடித்த தனிப்படை போலீசாரை வெகுவாக பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad