இதில், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்றாா், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே தொடங்கிய பேரணிக்கு மாவட்ட பாஜக தலைவா் அஷ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா தலைமை வகித்தாா். மாநில இளைஞரணிச் செயலா் வினோஜ் பி.செல்வம், விவசாய அணி மாவட்ட தலைவா் சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருன் பங்கேற்று பேரணியைத் தொடக்கி வைத்துப் பங்கேற்றாா், பின்னா், அவா் கூறியது: சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையில் விவசாயிகளுடன் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டோா் குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
பாஜகவினா் வன்முறை கலாசாரத்தை எப்போதும் விரும்புவதில்லை. மதுரையில் நடந்த காலணி வீச்சு சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்றாா், பேரணியில் மாநில ஓபிசி அணி பிரிவு தலைவா் லோகநாதன், ஒபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லயன் சீனிவாசன், மாவட்ட செயலா்கள் பன்னீா்செல்வம், பாலாஜி, தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலா் ரகு, பூண்டி பாண்டுரங்கன், நகரத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
No comments:
Post a Comment