பழிக்கு பழியாக ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 August 2022

பழிக்கு பழியாக ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள்.


கோயம்பேடு அருகே சாலையில் நடந்து சென்ற ரவுடி வெட்டிப் படுகொலை ஓராண்டுக்குப் பிறகு நண்பரின் கொலைக்கு பழிதீர்த்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28), ரவுடியான இவர், திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு கோயம்பேடு மந்தைவெளி தெருவில் நடந்து சென்ற ராஜ்குமாரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.


இதில், ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த கோயம்பேடு போலீசார், ராஜ்குமாரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவேற்காட்டைச் சேர்ந்த பிரகாஷ், கண்ணன் ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.


திருவேற்காட்டில் ஓராண்டுக்கு முன்பு நண்பனை கொலை செய்த வழக்கில் பழி தீர்க்கும் வகையில் ராஜ்குமாரை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad