திருவள்ளுர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கே.ஜி.கண்டிகை பகுதியிலிருந்து ஜி.சி.எஸ்.கண்டிகை வழியாக ஆந்திராவை நோக்கி லாரி சென்றது. அந்த லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். லாரியை போலீசார் சோதனையிட்டபோது, அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது.
லாரியுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment