இந்த உணவு திருவிழா, வருகின்ற ஜூன் 10 , 11 மற்றும் 12 ம் தேதிகளில் மூன்று நாட்கள், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை மைதானத்தில் பாரம்பரியச் சிறப்புடன் நடைபெற உள்ளது.
இதில் இதுவரை இல்லாத வகையில் உள்ளூர் உணவகங்கள் முதல் உலக நாட்டு உணவகங்கள் வரை சுமார் 150 உலகப் புகழ்பெற்ற உணவகங்கள் அறுசுவை அரங்கங்கள் இடம்பெற உள்ளது.
மூன்று நாள் நிகழ்வில் மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. உலகின் உயரமான 'பலுடா ஐஸ் கிரீம்' வீணாக்காமல் பகிர்வோம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்குதல்,பயன்படுத்திய எண்ணெய் சேகரித்து பயோ டீசல் தயாரிக்க வழங்குதல் ஆகிய செயல்பாடுகளில் உலக சாதனை படைக்க உள்ளது.
10 தலைப்புகளில் சுவையான சமையல் போட்டிகள் நடக்கவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, அறுசுவை அரசி, அறுசுவை அரசன்,இளவரசி மற்றும் இளவரசன் பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளை கவரும் வகையில், குய்க் கன் முருகன், பாகுபலி,மோட்டு பட்லு,டோரா மற்றும் சோட்டா பீம் போன்ற திரை சித்திரங்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment