திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் புகுந்த நபரால் பரபரப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் புகுந்த நபரால் பரபரப்பு.


திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதால் அதனை ஒரு அறையில் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் 42 ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருந்த அறையில் திடீரென மர்ம நபர் புகுந்து கதவை மூடிக்கொண்டார். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.


தகவலறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த நபர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் சிலிண்டர் அறையிலிருந்து வெளியே வரவில்லை. போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, `என்னை கத்தியால் வெட்ட வராங்க, குத்த வராங்க' என சிலிண்டரை பிடித்துக்கொண்டு அலறினார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து ஆக்சிஜன் சிலிண்டர் வைத்திருந்த அறைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அதில் அவர் திருவள்ளூர் அடுத்த காரணி பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(32) என்பதும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad