ஆவடியில் சுவர் இடிந்து கார் சேதம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

ஆவடியில் சுவர் இடிந்து கார் சேதம்.

கடந்த சில நாட்களாக கத்திரிவெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென கோடைமழை கொட்டித்தீர்த்தது, இதில் ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் மதில்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மற்றும் மூன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தது. 


இதில் அம்பத்தூரை சேர்ந்த ஹரிகரன் என்பவரது கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுற்றுச்சுவர் தரமற்ற நிலையில் இருந்ததால் இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad