ஆவடியை அடுத்த வெள்ளானூர் பகுதியில் பிரசாத் என்பவர் துரித உணவகம் பங்க் கடை, பழரச கடை , நடத்திவந்தார் இன்று மாலை ல மின் கசிவால் திடீரென கடையின் பின்புறம் ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஆவடி தீயணைப்பு வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு துறையினர் சிறிதுநேரம் கால தாமதமாக வந்திருந்தாள் பற்றி எரிந்துகொண்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து இருக்கும் தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர்களை அனைத்து அப்புறப்படுத்தினர்.இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் 3 லட்ச ரூபாய்க்கு மேல் பொருட்சேதம் முற்றிலும் எரிந்து நாசமானது, இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது, இந்த தீ விபத்து குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இப்பகுதியில் அனுமதியற்ற பல சாலையோர கடைகள் இயங்கி வருவதால் முறையான பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது, இப்பகுதி உள்ள கடைகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடை நடத்த அனுமதி மற்றும் முறையான ஆவணங்கள் உள்ளதா, எனவும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை உள்ளதா என்பது குறித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment