இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் துளசி நாராயணன், மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் தமிழரசு, ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் தச்சூர் முதல் சித்தூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்காக விளைநிலங்களை அழிப்பதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முடித்தனர். பின்னர் இது தொடர்பான புகார் மனுவை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்து விட்டு கலைந்து சென்றனர்
No comments:
Post a Comment