பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 April 2022

பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்


மேட்டுத்தெரு 11வது வார்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 நரிக்குறவர் குடும்பத்தினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் கூடாரம் அமைத்து வசிக்கின்றனர். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை வழங்கப்பட்டது. ஆனாலும் வீட்டு மனைபட்டா வழங்கவில்லை. குடிநீர், பொதுக்கழிப்பிட வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர பேரூராட்சி நிர்வாகம் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.


இதனால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள், வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். அடிப்படைவசதி செய்யது தரும்மாறு மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி அதிகாரிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. 


ஆனால் பேரூராட்சிநிர்வாகம் அந்த இடம் தனி நபருக்கு சொந்தமானது என கூறி அடிப்படை வசதிகளை செய்து தர தொடர்ந்து மறுத்துவிட்டனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர் ஜோதி இளஞ்செல்வன், கடந்த மாதம் நடைபெற்ற பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்துக் கூறி பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார். அதன் பின்பும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்நிலையில் நேற்று உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, குடிநீர், பொது கழிப்பிடம், சாலை வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


தகவலறிந்த காவல்துறையினர் விரைந்துவந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad