கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை வைத்திருந்த 3 பேர் கைது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 April 2022

கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை வைத்திருந்த 3 பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது சந்தேகிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த அன்புச்செல்வன், அஜித்குமார் ஆகியோரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.


அதில் இருவரிடமும் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிந்த போலீசார், அவர்களது கூட்டாளிகளான ராஜேஷ் குமார், ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது, ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக திருநின்றவூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad